Projects
Recent Projects
அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டங்கள்
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இடர்கால நிலையில் உதவிகள் தேவைப்பட்ட மக்களுக்கும், மற்றும் அவசரகால நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அண்மையில் எம்மால் நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டங்கள்.
இடர்கால உதவித்திட்டம்.
அம்பாறைப்பகுதி மக்களுக்கு கொரோணா / வெள்ள நிவாரண உதவித்திட்டம்.
Corona / Flood Relief Project for the people of Ampara.
2021 ஆம் ஆண்டு தொடக்க காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் கொரோணா பேரிடராலும் பெரு வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்திட்டம்.
- அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு கலையரசன் அவர்கள் தனது தொகுதி மக்களுக்காக விடுத்த நிதி சேகரிப்பு வேண்டுதலுக்கு வேல்ஸ் வாழ் மக்களாகிய எம்மால் £2,400 (636,519 ரூபா) பணம் அனுப்பிவைக்கப்பட்டது.
- 410 குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
- கிராம மக்களுக்கு இலவசமாக வாடகைக்கு கொடுப்பதற்காக உபகரணங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.
- ஆலையடிவேம்பு, திருக்கோயில், மற்றும் கல்முனை ஐச்சேர்ந்த கிராம மக்கள் பயனடைந்தார்கள்.
வெள்ள நிவாரணம்
பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி
Assistance to students affected by the massive flood disaster
யாழ் கிளிநொச்சி பகுதியில் 2019 தை மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்ககாக வேல்ஸ் பகுதி மக்களால் நிதி சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.
- கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளில் கலவி பயிலும் 400க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
- குறைந்தது எட்டு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் பயனடைந்தார்கள்.
- சோரன்பற்று, தருமபுரம், இராமநாதபுரம், கல்மடுநகர், கல்வெட்டிதிடல், பன்னங்கட்டி மற்றும் கிருஸ்ணபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தார்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான உதவி
செஞ்சோலை சிறுவர்களுக்கான நன்கொடை.
Donation to Sencholai Childen
2019 ஆம் ஆண்டு செஞ்சோலை சிறார்களுக்கு வேல்ஸ் தமிழர் சங்கமம் சார்பாக நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
One lakh rupees (£500) was donated to the Sencholai Children by the Tamilar Sangamam – Wales in 2019.
- ஒரு இலட்சம் ரூபாய் (£500) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
