A few words
About Us
"....மொழியும், கலையும், கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும், உயர்ச்சியும் அடையும் பொழுதே; தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது, பலம் பெறுகின்றது, மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது, தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது...."
தேசியத்தலைவர்.
நாம், தமிழர்கள் என்ற தேசிய இன அடையாளத்துடன் வேல்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்றோம். நாம் தேசியத்தைப் பாதுகாப்பதுடன் பிரதேசத்திற்குப் பிரதேசம் குழாமாக இணைந்து வாழ்ந்து வருகின்றோம்.
வேல்ஸ் பகுதியில் கல்விக்கூடங்களும் தன்னார்வு அமைப்புகளும் தத்தமது வரைமுறைக்கு உட்பட்டே செயல்பட்டு வருகின்றன. அதேவேளை இந்த அமைப்புக்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் அற்ற பலர் இலைமறை காய்களாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு பரந்துபட்டு வாழ்ந்துவரும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஓர் சமூகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இக்கட்டமைப்பின் அடிப்படை நோக்கங்களாக எமது அடையாளங்கள், மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து மேம்படுத்துதல் எம்மக்களின் அரசியல், பொருளாதாரம், சமூக மேம்பாடு என்பவற்றுக்காக பாடுபடுதல் என்பன அமைந்திருக்கும்.
Our Aim
and Objectives
எமது குறிக்கோள்
மற்றும்
எமது நோக்கங்கள்
- எமது குறிக்கோள்
- நாம் தமிழராக தலைநிமிர்ந்து வாழவும் எமது இருப்பினை நிலை நாட்டுவதற்கும் நாம் ஒரு கட்டமைப்பின் கீழ் இணைந்து செயற்பட தேவையான தளமாக செயற்படுதல்.
- எமது நோக்கங்கள்
- தமிழர்களது கலை கலாச்சார நிகழ்வுகளினூடாக வேல்ஸ் வாழ் தமிழ் மக்களை ஒன்றிணைப்பது.
- இணைந்து செயற்படுவதன் மூலம் எமக்கு கிடைக்கும் பலத்தினை கொண்டு தமிழ் மக்களது அரசியல் செயற்பாட்டினை முன்னெடுப்பது.
- எமது செயற்பாடுகள், மற்றைய மாநிலங்கள், நாடுகளில் வாழும் எமது மக்களை ஒன்றாக சங்கமித்து பயணிக்க தேவையான சங்கமங்களை உருவாக்க தூண்டும் வகையில் இருக்கும்.
- தமிழ் பாடசாலைகள் மற்றும் கோயில் நிகழ்வுகளில் பங்குபற்றாத அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து பயணிக்கும் தளமாக செயற்படுதல்.
- வேல்ஸ் பகுதியில் வாழும் சிறுதொழிலதிபர்களை ஒன்றிணைத்து செயற்பட தளம் அமைத்து கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களது வாங்கும் சக்தி/கொள்வனவு திறன் (‘Buying Power’) இனை அதிகரிகச்செய்வது.
- வேல்ஸ் பகுதியில் வாழும் தமிழ் இளையோரை ஒன்றிணைத்து செயற்பட தளம் அமைத்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கிடையேயான ஒரு நட்பு வட்டத்தினை உருவாக்குதல்.
- தாயக மக்களின் மனிதாமான அடிப்படையிலான தேவைகளுக்கு உறவுப்பாலமாக செயற்படுதல்.
Numbers Speak for Themselves
Joined Members
0
+
Conducted Events
0
+
Completed Projects
0
+
