Projects

Recent Projects

அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டங்கள்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இடர்கால நிலையில் உதவிகள் தேவைப்பட்ட மக்களுக்கும், மற்றும் அவசரகால நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அண்மையில் எம்மால் நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டங்கள்.

"அம்பாறை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு கோவிட்-19 மற்றும் வெள்ள அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டு அல்லலுற்ற எங்களுடைய மக்களுக்கு தமிழர் சங்கமம் - வேல்ஸ் அமைப்பு முன்வந்து உதவிகளை வழங்கியமைக்காக மாவட்ட மக்கள் சார்பாக மனமகிழ்ந்த நன்றியினை தெரிவித்துக்கொளவதோடு மேலும் உங்களது பணிதொடர இறைவனை வேண்டுகின்றேன்."
தவராசா கலை அரசன்
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இடர்கால உதவித்திட்டம்.

அம்பாறைப்பகுதி மக்களுக்கு கொரோணா / வெள்ள நிவாரண உதவித்திட்டம்.

Corona / Flood Relief Project for the people of Ampara.

2021 ஆம் ஆண்டு தொடக்க காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் கொரோணா பேரிடராலும் பெரு வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்திட்டம்.

வெள்ள நிவாரணம்

பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி

Assistance to students affected by the massive flood disaster

யாழ் கிளிநொச்சி பகுதியில் 2019 தை மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்ககாக வேல்ஸ் பகுதி மக்களால் நிதி சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.

"வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது பாடசாலையின் 72 மாணவர்களுக்கான புத்தகபைகள் பெற்றுக்கொண்டோம். இப் பேருதவியை புரிந்தமைக்காக தங்களுக்கு மிக்க நன்றியறிதலினை தெரிவித்துக்கொள்கின்றோம்."
Mr.S.Raveendran
Principal, Kli Ramanathapuram East, G.T.M.S
"Thank you for your generous support"
Sencholai Child Development Center
Thiruvaiaru, Kilinochchi
போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான உதவி

செஞ்சோலை சிறுவர்களுக்கான நன்கொடை.

Donation to Sencholai Childen

2019 ஆம் ஆண்டு செஞ்சோலை சிறார்களுக்கு வேல்ஸ் தமிழர் சங்கமம் சார்பாக  நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

One lakh rupees (£500) was donated to the Sencholai Children by the Tamilar Sangamam – Wales in 2019.

Need more information?

We help our people with the support of you

Want to make a difference?

Help us raise money for our humanitarian causes